அரச வைத்தியசாலைகளில் மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறை!

Mayoorikka
4 years ago
அரச வைத்தியசாலைகளில் மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறை!

அரச வைத்தியசாலைகளில் தற்போது 60 வகையான மருந்துகள் ஒரு வாரம் முதல் ஒரு மாதத்திற்கே போதுமானதாக உள்ளதாக ஔடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது 40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், மருந்துப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிலைமையை சமாளிப்பதற்கு மேலும் 20 மில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டொக்டர் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4