படம் வெளிவருவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பார்த்த பிரபலம்..

Prabha Praneetha
4 years ago
படம் வெளிவருவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பார்த்த பிரபலம்..

தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் பீஸ்ட் திரைப்படம் பற்றி தான்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் ஆரவாரமாக வெளியாக இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக தமிழகத்தில் வெளியிட இருக்கிறார்.

இந்நிலையில் விஜய்யின் ரசிகர்கள் தற்போது இந்த திரைப்படத்தை காண்பதற்கு ஆவலாக இருக்கின்றனர்.

ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் உட்பட அனைவரையும் அதிக எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படத்தில் இடம்பெற்றிருந்த அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் நெல்சன் இந்தப் படம் தொடர்பான ஒரு சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார்.

அதாவது பீஸ்ட் திரைப்படம் முழுவதுமாக முடிந்த பிறகு அவர் முதன்முதலில் அனிருத் மற்றும் ஸ்டுடியோவில் பணியாற்றும் அவருடைய நண்பர்களுக்கு தான் போட்டு காண்பித்து இருக்கிறார்.

நெல்சன் இசையமைப்பாளர் அனிருத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அந்த வகையில் அவர் நிறைய நேரம் அந்த ஸ்டுடியோவில் தான் இருப்பார். அதனால்தான் அவர் தன் நண்பர் அனிருத்துக்கு படத்தை முதன்முதலாக போட்டு காண்பித்துள்ளார்.

படத்தைப் பார்த்த அவர்கள் அனைவரும் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து இருக்கின்றனர். மேலும் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும் என்றும் அவருக்கு தங்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கின்றனர்.

இதுதான் பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனம் என்று நெல்சன் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4