காதல் தோல்வி எதிரொலி - காதலி எடுத்த விபரீத முடிவு; காதலன் தற்கொலை முயற்சி

#India #Love #Suicide
காதல் தோல்வி எதிரொலி - காதலி எடுத்த விபரீத முடிவு; காதலன் தற்கொலை முயற்சி

ராஜபாளையத்தில் காதலி தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல், காதலனும் தற்கொலை முயற்சி நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (25). வேன் ஓட்டுனரான இவரும்; இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரியும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக முனீஸ்வரனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் உறவினர்கள் திருமணம் பேசியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த மகேஸ்வரி வீட்டின் அருகே இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த கீழராஜ குலராமன் காவல் துறையினர் மகேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், முனீஸ்வரனுக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து இரவில் யாருக்கும் தெரியாமல், வீட்டின் அருகே இருந்த பாழடைந்த கட்டடத்தில் முனீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து இவரை காணாமல் தேடிய இவரது நண்பர்கள், தூக்கிட்ட நிலையில் இருந்தவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கீழராஜ குலராமன் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் பெண் தற்கொலை செய்து கொண்டதும், காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4