கனடாவில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்

#Canada #India #Student #Murder
Prasu
4 years ago
கனடாவில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்

இந்தியாவைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் (21) என்ற மாணவர் கனடாவில் தங்கி படித்து வந்தார்.

டொராண்டோவில் உள்ள ரெயில் நிலையத்துக்கு கார்த்திக் வாசுதேவ் சென்றபோது அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கார்த்திக் வாசுதேவ் உடலில் குண்டு பாய்ந்து அவர் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறும்போது, “இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் வருத்தம் அடைந்து உள்ளோம். அவரது குடும்பத்துக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4