நயன்தாரா உடன் மீண்டும் இணையும் ஜெயம் ரவி..

Prabha Praneetha
4 years ago
நயன்தாரா உடன் மீண்டும் இணையும் ஜெயம் ரவி..

இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வன், அகிலன் என அடுத்து இரண்டு பெரிய படங்களை களமிறக்க காத்திருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.

இந்நிலையில், தனி ஒருவன் கூட்டணியில் அமைய உள்ள இந்த படத்திற்கு செம சூப்பரான டைட்டிலை இயக்குநர் அகமது தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
 

2009ம் ஆண்டு ஜெய் மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வாமனன் படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் அகமது. அதன் பிறகு, 2013ல் ஜீவா, வினய், சந்தானம் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மனிதன் படத்தையும் இயக்கியவர் இவர் தான்.

ஜெயம் ரவி மற்றும் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகி வந்த ஜன கண மன திரைப்படம் நீண்ட காலமாக பெண்டிங்கில் உள்ளது.

பெரும்பகுதி படம் படப்பிடிப்பு நடத்தப்பட்டு விட்டதாகவும் வெளிநாட்டு போர்ஷன்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த படத்தை இயக்கி வரும் அகமது மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4