ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா - புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!
ஆந்திராவின் புதிய அமைச்சரவை, இன்று பதவி ஏற்கிறது. இதில், நடிகை ரோஜாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார்.ஆனால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 பேரும், சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக, புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்.
அமராவதியை அடுத்த வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில், இன்று காலை பதவி ஏற்பு விழா நடக்கிறது.இது தொடர்பாக, ஆந்திர அரசு ஆலோசகர் சஜ்ஜல ராமகிருஷ்ணா ரெட்டி நேற்று கூறியதாவது:புதிய அமைச்சர்களின் இறுதி பட்டியல், கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பர். புதிய அமைச்சர்கள், அவர்களின் இலாகா குறித்த விவரங்கள், அப்போது தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மூத்த அமைச்சர்கள் 10 பேருக்கு, அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.மேலும், ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்கள், சமீபத்தில் 26 ஆக பிரிக்கப்பட்டன. 2024 சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து, மாவட்டம்தோறும் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, புதிய அமைச்சர்கள் பட்டியலில், நகரி தொகுதி எம்.எல்.ஏ.,வும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபலமான நடிகையுமான ரோஜாவின் பெயர் இடம் பெற்று இருப்பதாகவும், அவருக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படும் என்றும், கட்சி நிர்வாகிகள் தெரிவித்துஉள்ளன