10 வருடம் பேட்டி கொடுக்காத உண்மையை போட்டுடைத்த விஜய்

Prabha Praneetha
4 years ago
10 வருடம் பேட்டி கொடுக்காத உண்மையை போட்டுடைத்த விஜய்
 

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளிவருவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் விஜய் தற்போது சன் டிவியில் நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார்.

இயக்குனர் நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விஜய் பத்து வருடங்களாக அவர் ஏன் மீடியாவுக்கு பேட்டி கொடுக்கவில்லை என்பது பற்றியும் தெரிவித்துள்ளார்.

முன்பெல்லாம் விஜய் தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு தினங்களின் போதும், பட வெளியீட்டின் போதும் சின்னத்திரை சேனல்களுக்கு பேட்டி கொடுப்பார்.

ஆனால் இவர் கடந்த 10 ஆண்டுகளாக எந்த விதமான பேட்டியும் கொடுப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர் நிகழ்ச்சியில் பேசும் பல விஷயங்கள் வேறுவிதமாக வெளிவருவதுதான்.

இதைப் பற்றி கூறிய விஜய் நான் ஒன்று கூறினால் அது அப்படியே ட்விஸ்ட் செய்யப்பட்டு மக்களுக்கு காட்டப்படுகிறது. அதனால் ஒரு சில பிரச்சினைகளும் உருவாகி விடுகிறது.

அதனால்தான் நான் எதற்கு வம்பு என்று இதுவரை எந்த பேட்டியும் கொடுக்கவில்லை என்று கூறினார்.

ஆனால் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது நான் என் மனதில் உள்ளவற்றை ஆடியோ லான்ச் அப்படியே போட்டு உடைத்து விடுவேன்.

மேலும் ஆடியோ லான்ச் மூலம் தன் ரசிகர்களை பார்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமைவதாக கூறினார். இதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறது. 

அப்படி நான் பேசும் விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சில எதிர்மறை கருத்துக்களை உருவாக்கி விடுகிறது.

மேலும் நான் பேசும் விஷயங்கள் விமர்சனங்களுக்கும் ஆளானது. நம்மால் எதற்கு மற்றவர்கள் பிரச்சனை மேலும் நாம் நல்லது கூற போய் அதுவே நமக்குஎதிர்மறையாக வந்தால்தான் பேட்டி கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4