இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்

#TamilCinema
Prasu
3 years ago
இளையராஜாவை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.

ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ’ ஓ சாதிசால்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தி திரைப்படத்தை இயக்கவுள்ளார். 

இந்நிலையில் இளையராஜாவை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன் சில விஷயங்களை குறிப்பிட்டு இளையராஜாவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!