IPL Match22 - உத்தப்பா, துபே அதிரடி- 216 ரன்களை குவித்த சென்னை

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match22 - உத்தப்பா, துபே அதிரடி- 216 ரன்களை குவித்த சென்னை

ஐ.பி.எல்  தொடரில் இன்று மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும்  22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன .

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.  

சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மொயீன் அலி 3 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.  இதன் பின்னர் ஜோடி சேர்ந்த உத்தப்பா , ஷிவம்  துபேவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

உத்தப்பா 50 பந்துகளில் 4  பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 88 ரன்கள் அடித்து அவுட்டானார். 

மறுபுறம் துபேவும் 46 பந்துகளில் 5 பவுண்டர்கள், 8 சிக்சர்களுடன் 95  ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது.இதையடுத்து 217 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூரூ அணி களம் இறங்கி உள்ளது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4