IPL Match24 - ராஜஸ்தானுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது குஜராத்

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match24 -  ராஜஸ்தானுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து குஜராத் அணி பேட்டிங்கை தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்-மேத்யூ வேட் களமிறங்கி ஆடினார்கள். வேட் 12 ரன்கள் இருக்கும் போது ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். அடுத்ததாக வந்த தமிழக வீரர் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சுப்மன் கில் 13 என அடுத்தடுத்து 3 வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இந்நிலையில் ஹர்த்திக் பாண்ட்யா-அபினவ் மனோகர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் மனோகர் சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். சிறப்பாக ஆடி வந்த ஹர்த்திக் பாண்ட்யா அரை சதம் அடித்தார்.

அடுத்ததாக ஹர்த்திக் பாண்ட்யாவுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இதனால் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4