கடிதம் எழுதிவைத்துவிட்டு ஓடிய விஜய் - பதறிப்போய் தேடியுள்ள அப்பாவும் அம்மாவும்!!

Prabha Praneetha
4 years ago
கடிதம் எழுதிவைத்துவிட்டு ஓடிய விஜய் - பதறிப்போய்  தேடியுள்ள அப்பாவும் அம்மாவும்!!

நடிகர் விஜயின் அப்பா விஜய் தனக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடியதாக தெரிவித்துள்ளார் .

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். தற்போது நடிகராகம் வலம் வருகிறார்.

நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் மனக்கசப்பு இருப்பதாகவும் இருவரும் கருத்து வேறுபாட்டால் பேசிக்கொள்வதில்லை என்றும் தகவல் வெளியானது.

ஆனால் சமீபத்தில் விஜய் அளித்த பேட்டியில் கடவுளுக்கு அடுத்தப்படியாக தனது அப்பாதான் என்றும் அப்பாதான தங்கள் குடும்பத்தின் ஆணி வேர் என்றும் குறிப்பிட்டார்.

இதனைக் கேட்ட எஸ்ஏ சந்திரசேகர், தனக்கும் தனது மகனுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எல்லா குடும்பங்களிலும் இருக்கும் பிரச்சனைதான் என்றும் கூறி மகிழ்ந்தார்.

இந்நிலையில் தனது யூட்யூப் சேனலில் யார் இந்த எஸ்ஏசி என்ற தலைப்பில் தான் கடந்த வந்த பாதையையும் தான் பட்ட அவமானங்களையும் உருக்கமாக பேசி வருகிறார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர்.

அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள வீடியோவில் நடிகர் விஜய் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது தன்னுடைய பிடிவாதம்தான், தான் இன்று இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் என்ற எஸ்ஏ சந்திரசேகர், தன்னுடைய ஜீன்தான் தனது மகனுக்கும் என்று விஜய்யின் பிடிவாதத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து, இன்று அவர் இருக்கும் இந்த இடத்திற்கு காரணம் அவருடைய அந்த பிடிவாதம்தான் என்று கூறியுள்ளார்.


பின்னர் ஒரு நாள் என்னை தேடாதீர்கள் என கடிதத்தை எழுதி வைத்துவிட்டு திடீரென காணாமல் போய்விட்டாராம். ஒரே மகன் எங்கே போனாரோ? என்ன ஆனாரோ என பதறி தேடியுள்ளனர் அப்பாவும் அம்மாவும்.

பின்னர் தியேட்டர் ஒன்றில் படம் பார்த்துக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மகனை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளனர்.

சினிமாவில் நடித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதத்துடன் இருந்துதான் இன்று இப்படி ஒரு நடிகராக உள்ளாராம் விஜய்.

விஜய் மிரட்டியோ அல்லது பயமுறுத்தியோ தன்னைப்போலவே பிடிவாதமாக இருந்து தான் நினைத்ததை சாதித்துவிட்டார் என பெருமிதத்துடன் இந்த தகவலை கூறியுள்ளார் அவரது அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4