மோகன்.. செல்வராகவனுடன் மோதப்போகும் கில்லாடி நடிகர்

Prabha Praneetha
4 years ago
மோகன்.. செல்வராகவனுடன் மோதப்போகும் கில்லாடி நடிகர்

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றவர் இயக்குனர் மோகன் ஜி. கடைசியாக இவர் இயக்கிய ருத்ரதாண்டவம் திரைப்படம் வரவேற்பை பெற்ற அளவிற்கு சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

அந்த படத்தை தொடர்ந்து இவர் அடுத்து எந்த மாதிரியான கதையை இயக்கப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் அவர் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை தன்னுடைய சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

தன்னுடைய அடுத்த படைப்பு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும், படத்தின் பெயர் பகாசூரன் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஒரு இயக்குனராக நம்மை பிரமிப்பில் ஆழ்த்திய செல்வராகவன் சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவரின் நடிப்பில் தற்போது வெளியான பீஸ்ட் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது.

இதற்கு முன்பே அவர் நடிப்பில் உருவான சாணி காகிதம் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4