விஜய்க்கு ஐஸ் வைக்கும் பிரபல நடிகை..

Prabha Praneetha
4 years ago
விஜய்க்கு ஐஸ் வைக்கும் பிரபல நடிகை..

தற்போது விஜய்யின் நடிப்பில் உருவான பீஸ்ட் படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. டாக்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நெல்சன், விஜய் உடன் கூட்டணி அமைத்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இந்நிலையில் படம் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது.

இதையடுத்து நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படம் இயக்க இருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க விஜய் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய்யுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

இந்த பட அறிவிப்பு வெளியான போது எப்படியாவது விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்து விட வேண்டும் என்று பல நடிகைகளும் ஆர்வம் காட்டி வந்தனர்.

இதில் ஏற்கனவே விஜய்யுடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ்தான் அதிக முயற்சி எடுத்தார்.

ஆனால் அவருக்கு இந்த வாய்ப்பு கைகூடவில்லை. ஆனாலும் மனம் தளராத அவர் எப்படியாவது விஜய்யுடன் ஜோடி சேர வேண்டும் என்று தற்போது ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

அதாவது பீஸ்ட் படம் வெளியான அன்றே அந்த படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக கீர்த்தி சுரேஷ் தியேட்டருக்கு வந்திருந்தார்.

படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு என்பதை காண தியேட்டருக்கு வந்து சாதாரண விஷயம்தான்.

ஆனால் திடீரென கீர்த்தி சுரேஷ் வந்தது மற்ற நடிகைகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இளம் நடிகையான பிரியங்கா அருள் மோகனும் பீஸ்ட் படத்தின் முதல் காட்சியை காண வந்திருந்தார்.

தற்போது இவர்கள் இருவரைப் பற்றிய செய்திதான் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதன்மூலம் அவர்கள் விஜய்யை இம்ப்ரஸ் செய்ய முயற்சிப்பதாகவும், அடுத்த பட வாய்ப்புக்கு அடி போடுவதாகவும் ஒரு பேச்சு சக நடிகைகள் மத்தியில் நிலவுகிறது.

மேலும் இவர்களின் இந்த செயலால் மற்ற நடிகைகள் சிறிது கடுப்பிலும் இருக்கின்றனர்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4