அனுராதபுரம் விபச்சார விடுதியில் திடீர் சோதனை - ஆதிவாசி யுவதி உட்பட 4 பேர் கைது

Prathees
4 years ago
அனுராதபுரம் விபச்சார விடுதியில் திடீர் சோதனை - ஆதிவாசி யுவதி உட்பட 4 பேர் கைது

புத்தாண்டு காலத்தில் அனுராதபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து நடாத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த போது ஆதிவாசி யுவதி  உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, நிடங்கலவில் உள்ள  விடுதி ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கு தங்கியிருந்த பல பெண்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் இரத்மலானையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றைய பெண் மஹியங்கனை, தம்பன நிடங்கல பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பழங்குடியின பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இரண்டு ஆண் சந்தேக நபர்களும் அடங்குவதாகவும் அவர்களில் ஒருவர் விடுதியில் பணிபுரிந்து வந்தவர் எனவும் மற்றையவர் விடுதியை நடத்தி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்களை விபச்சாரத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் அனுராதபுரம், மாத்தளை சந்தி குருந்தன்குளம் மயானத்திற்கு அருகில் கொங்கிரீட் பட்டறை ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4