பல தோற்றத்தில் விக்ரம்.. வைரலாகும் கோப்ரா பாடல்

Prabha Praneetha
4 years ago
பல தோற்றத்தில் விக்ரம்.. வைரலாகும் கோப்ரா பாடல்

விக்ரம் நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் கோப்ரா படத்தின் பாடல் வெளியாகி வைரலாகிறது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி உள்ளார்.

விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4