ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி?

#Cooking #dinner #meal
ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி?

தேவையானவை: 

  • பச்சரிசி - 2 கப், 
  • உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன், 
  • வெண்டைக்காய் காம்புப் பகுதி (சுத்தம் செய்தது) - அரை கப், 
  • பெருங்காயத்தூள் - சிறிதளவு, 
  • உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 

  1. அரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். வெண்டைக்காய் காம்பை பொடியாக நறுக்கி, அரிசியுடன் சேர்த்து உப்பு போட்டு நைஸாக அரைக்கவும். 
  2. இந்த மாவு 5 மணி நேரம் புளிக்க வேண்டும். மாவை கரண்டியில் எடுத்தால் ஜவ்வு போன்று கொழ கொழப்பாக இருக்கும். 
  3. ஆனால் தோசைக்கல்லில் மாவை ஊற்றி கரண்டியால் தேய்த்தால், அழகான தோசை வார்க்க வரும். வேண்டாம் என்று தூக்கி எறியும் காம்பில் செய்யும் வித்தியாசமான தோசை இது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4