இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 23-04-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 23-04-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அதிகம்

அளவுக்கு
அதிகமானால்,
பற்று வெறியாகும்,
உணவு நஞ்சாகும்,
உரிமை ஆணவமாகும்,
உறவு பகையாகும்
வரவு பாரமாகும்
புகழ் போதையாகும்
பக்தி குருடாகும்
அளவான வாழ்வே
உன்னத வளமாகும்!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வாழ்க்கை

மரம் பட்டுப்போனால்...
பறவைகள் வருவதில்லை...!
வாழ்ந்தவன் கெட்டுப்போனால்....
உறவுகள் மதிப்பதில்லை....!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வெற்றி

ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும் போது
ஊமையாய் இரு....
புகழ்ந்து பேசும் போது
செவிடனாய் இரு....
எளிதில் வெற்றி பெறுவாய்....!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-விழிப்புணர்வு

ஆயிரக்கணக்கான 
கேள்விகள் இருக்கலாம்,
ஆனால் அதற்கு ஒரே ஒரு
பதில்தான். உனது
விழிப்புணர்வு.....!!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-ஏமாற்றம்

பல ஏமாற்றங்களைச் சந்தித்து
விட்டேன் என்று யாரிடமும்
சொல்லி அழாதே....
உன் பலவீனத்தை புரிந்து
கொண்டு அவர்களும் உன்னை
ஏமாற்றுவார்களே தவிர ஆறுதலாக
இருக்க மாட்டார்கள்!


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4