IPL Match37 - தொடர்ந்து 8வது தோல்வி - மும்பையை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match37 - தொடர்ந்து 8வது தோல்வி - மும்பையை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 

மும்பை சார்பில் பொல்லார்டு, மெரிடித் தலா 2 விக்கெட் எடுத்தனர். டேனியல் சாம்ஸ், பும்ரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. இஷான் கிஷண் 8 ரன்னிலும், ப்ரெவிஸ் 3 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ரோகித் சர்மா 39 ரன்னில் வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. திலக் வர்மா, பொல்லார்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது.திலக் வர்மா 38 ரன்னில் அவுட்டானார். பொல்லார்டு 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், மும்பை அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது லக்னோ அணி பெறும் 5வது வெற்றியாகும். மும்பை அணி தொடர்ந்து 8வது தோல்வியை சந்தித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4