சிவகார்த்திகேயன் வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Prabha Praneetha
2 years ago
சிவகார்த்திகேயன் வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிவகார்த்திகேயனின் சம்பள பாக்கி விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பியது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் சிவகாா்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில், எனது நடிப்பில் ‘மிஸ்டா் லோக்கல்’ படத்தைத் தயாரிப்பதற்காக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலையில் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் படம் வெளியான நிலையில், இதுவரை ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, ரூ.4 கோடி பாக்கி வைத்துள்ளாா்.

ரூ.11 கோடிக்கான டிடிஎஸ் தொகையைப் பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால் கடந்த 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை செலுத்த வேணடுமென எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து முன்னரே வழக்கு தொடுத்துள்ளேன்.

 எனவே, ரூ.4 கோடி சம்பள பாக்கியை எனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும்.

தொகை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’, விக்ரம் நடிக்கும் ‘சீயான்61’, சிம்பு மற்றும் கௌதம் காா்த்திக் நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு, ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பள பாக்கி விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பியது. 

மேலும் பிரச்னைக்கு தீர்வு காண சமரச தீர்வாளரை நியமித்த நீதிமன்றம் ஞானவேல்ராஜா தயாரிக்கும் 3 படங்களை வெளியிடத் தடை கோரிய சிவகார்த்திகேயனின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!