பகல் வேளைக்கு தேங்காய் மீன் வறுவல் சமைப்பது எப்படி?
#Cooking
#Fish
#Fry
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்
- வஞ்சிர மீன் - 500 கிராம்
- சோளமாவு - 4 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- கொத்தமல்லி - சிறிதளவு
- பூண்டு விழுது - அரை ஸ்பூன்
- எலுமிச்சை பழம் - 1
- மிளகு பொடி - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- இஞ்சி - சிறிய துண்டு
- தேங்காய் துருவல் - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அரைத்த விழுதோடு மிளகாய்த் தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும். அடுத்து ஊற வைத்த மீனை பிரிடஜில் இருந்தது எடுத்து தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.
- தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.