160 மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘அவதார் 2’

#Cinema
Prasu
4 years ago
160 மொழிகளில் வெளியாகவிருக்கும்  ‘அவதார் 2’

‘அவதார் 2’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம்.

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தத் திரைப்படத்தின் 2ஆம் பாகம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தைப் போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலரும் மிக விரைவில் வெளியாக உள்ளது.

மேலும், இப்படம் உலக சினிமா வரலாற்றில் சிறந்த உருவாக்கத்திற்கான சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4