விக்ரம் படம் குறித்த வீடியோவை பகிர்ந்த கமல்..

Prabha Praneetha
4 years ago
விக்ரம் படம் குறித்த வீடியோவை பகிர்ந்த கமல்..

கமல் நடித்து வெளியாகவுள்ள 'விக்ரம்' திரைப்படம் குறித்து நடிகர் கமல் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் திகதி  வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இப்படத்தின் டிரைலரை மே 18 ஆம் திகதி தொடங்கவிருக்கும் உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் விக்ரம் படத்தின் போஸ்டர்களை படக்குழு ரயில்களில் ஒட்டி ரசிகர்களை கவர்ந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் கமல், விக்ரம் படம் குறித்த வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும். என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை.

மூன்றாம்பிறை, மகாநதி, தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது" என குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4