நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் திரைப்படம்
Prabha Praneetha
3 years ago

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 'ஐங்கரன்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் 'ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கியுள்ள திரைப்படம் 'ஐங்கரன்'. காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் படத்தை தயாரித்துள்ளார்.
இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக, மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் சில பொருளாதார சிக்கல், கொரோனா பரவல் உள்ளிட்ட பல காரணங்களால், 3 ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கு வராமல் முடங்கியது.
இந்நிலையில் 'ஐங்கரன்' படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளனர். வருகிற மே மாதம் 5ம் திகதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



