திடீரென டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து விபத்து பலர் மருத்துவமனையில்!

#SriLanka #Accident #Hospital #Bus #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
திடீரென டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து விபத்து பலர் மருத்துவமனையில்!

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டையிழந்து வீதியோர கால்வாயில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்துச் சம்பவம் வேளையில் கொஸ்கம சாலாவ பகுதியில் இன்று (09) காலை , இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரியிலிருந்து பத்ரமுல்லை நோக்கி இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்களை ஏற்றிச் சென்ற அலுவலக பணியாளர் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. 

குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்தின் முன்புற இடது பக்க டயர் திடீரென வெடித்ததால் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. 

இதனையடுத்தே சாலையோரத்தில் இருந்த கால்வாயில் விபத்திற்குள்ளாகி முன்னோக்கி சென்று நிறுத்தப்பட்டது. 

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயமடைந்து கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!