IPL Match48 - 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match48 - 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் களமிறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 9 ரன், விருத்திமான் சஹா 21 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 65 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணி வீரர் ஷிகர் தவான் 62 ரன்களும், லிவிங்ஸ்டோன் 30 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.  பானுகா ராஜபக்சே 40 ரன்கள் எடுத்தார்.  


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4