கமலுக்கு ஜோடியான 27 வயது இளம் நடிகை..

Prabha Praneetha
4 years ago
கமலுக்கு ஜோடியான 27 வயது இளம் நடிகை..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் விக்ரம்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருக்கிறது.

வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலின் நடிப்பில் இந்த படம் வெளியாவதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் படத்தை காண காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் படம் குறித்து சமீப காலமாக வெளியாகி வரும் ஒவ்வொரு அப்டேட்களும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

அதில் ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைசாக கமல் இந்த படத்தில் பழைய விக்ரம் திரைப்படத்தில் வருவது போன்று மிகவும் இளமையாக வர இருக்கிறாராம்.

இதற்காக ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற சில புதிய தொழில்நுட்பங்களை இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார்.

கமல் அப்படி இளமையாக வரும் அந்த சில நிமிட காட்சிகள் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

பலரும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடி கிடையாது என்றே நினைத்திருந்தனர். படக்குழுவும் அதைத்தான் மெயின்டெயின் செய்து வந்தது.

ஆனால் தற்போது கமலுக்கு ஜோடியாக கன்னட நடிகையும், மாடலுமான ஷாவ்னி ஸ்ரீவஸ்தாவா நடித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

29 வயதான அவர் 67 வயதான கமலுக்கு ஜோடியாக நடித்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காரணத்திற்காகத் தான் இயக்குனர் இந்த விஷயத்தை சஸ்பென்சாக வைத்திருந்தாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4