நார்டிக் உச்சிமாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இந்திய பிரதமர் மோடி, 3 ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தில் முதலில் ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கால்சை சந்தித்து பேசினார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் அங்கிருந்து டென்மார்க் வந்தடைந்தார். டென்மார்க் பிரதமர் பிரதமர் பிரடெரிக்சன் சந்தித்து பேசினார்.
இன்று கோபன்ஹேகன் கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனையில் நடைபெற்ற, 2வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். நார்டிக் பிராந்திய நாடுகளான டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய 5 நாடுகளில் பிரதமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின்போது உக்ரைன் போர், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழிமுறைகள், பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்பின்னர், தனது டென்மார்க் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டார். பாரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க உள்ளார்.