கல்வி கவுன்சிலை நிறுவுவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஒப்புதல்!

#SriLanka #education #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
கல்வி கவுன்சிலை நிறுவுவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கைக்கு ஒப்புதல்!

கல்வி கவுன்சிலை நிறுவுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற துணைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தலைமையில் தொடர்புடைய நாடாளுமன்ற துணைக் குழு கூடியபோது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த கவுன்சிலை ஸ்தாபிப்பதற்கான நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு, அதனை சட்டமாகக் கொண்டுவர ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். 

அந்தக் காலப்பகுதியில், ஆசிரியர்கள், அதிபர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க முடியும். 

இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான திருத்தங்களை மேற்கொண்டு சட்டமாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!