ஏ.ஆர்.ரஹ்மானின் மகளுக்கு எளிய முறையில் நடந்த திருமணம்..?

Prabha Praneetha
4 years ago
ஏ.ஆர்.ரஹ்மானின் மகளுக்கு எளிய முறையில் நடந்த திருமணம்..?

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக ஊடக கணக்கில் தனது மூத்த மகள் கதீஜா ரஹ்மான் சவுண்ட் இன்ஜினியரும் தொழிலதிபருமான ரியாஸ்தீன் ரியானை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

உலகளவில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு கதீஜா, ரஹீமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

மூத்த மகள் கதீஜாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை ஏ.ஆர்.ரகுமான் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

கொரோனா காரணமாக எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணத்தையும் சிம்பிளாக நடத்தி முடித்துள்ளார் ரகுமான்.

ஆம், ரகுமானின் மூத்த மகள் கதீஜா – ரியாசுதீன் ஷேக் முகமது ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனை ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். கதீஜா மற்றும் ரியாசுதீன் ஆகியோருடன் குடும்பமாக நின்று எடுத்த புகைப்படத்தை ரகுமான் வெளியிட்டுள்ளார்.

இந்த திருமண விழாவில் ரகுமான் குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

ரகுமானின் மருமகன் ரியாசுதீன் சவுண்ட் என்ஜினியர் ஆவார். ரகுமானிடமே அவர் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4