‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் மாதவனின் கனவு படம்..! மகிழ்ச்சியில் மாதவனும் , ரசிகர்களும்…
மத்திய அரசின் கலாசார துறை மாதவனின் ராக்கெட்டரி படத்தை தேர்வு செய்து கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. வரும் 19-ஆம் திகதி சர்வதேச பிரபலங்கள் முன்னிலையில் இந்த படம் திரையிடப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து மாதவன் கூறியதாவது :
எனது மனநிலை தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது . ராக்கெட்டரி படத்தை உருவாக்கும்போது நம்பி நாராயணன் கதையை மட்டுமே சொல்ல விரும்பினேன். ஆனால் தற்போது நடப்பதையெல்லாம் என்னால் நம்ப முடியவில்லை.
ஒரு அறிமுக இயக்குனராக இது எனக்கு அதிக பதட்டத்தை ஏற்படுத்துகிறது . இந்த படம் இந்தியாவை பெருமைப்படுத்தும் என நாம் நம்புகிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துளளார் .
இந்த படத்தில் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் விரைவில் ராக்கெட்டரி படம் வெளியாக இருக்கிறது.
ராக்கெட் தொழில் நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதாகி பின்னர் நிரபராதி என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை வரலாற்றின் உண்மை சம்பவங்களை கருவாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.
மேலும் இந்த படத்தில் நம்பிநாரயணனாக வயதான தோற்றதுக்கு தன்னை மாற்றிக்கொண்டு மாதவன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .