ஐக்கிய தேசிய கட்சி ரணிலை வம்புக்கு இழுக்கும் சாணக்கியன்!

#SriLanka #United National Party #Ranil wickremesinghe
ஐக்கிய தேசிய கட்சி ரணிலை வம்புக்கு இழுக்கும் சாணக்கியன்!

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ரணிலும் பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கொலைகாரர்களின் ஆதரவுடன் 2013ஆம் ஆண்டுதொகுதி அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளேன்.

பிள்ளையான் 600 பேரை கொலை செய்ததாக குறிப்பிடப்படும் விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எனது பெயரையும் குறிப்பிட்டுள்ளமை பொறுத்தமற்றது.

ஏனெனில் நான் 1990 ஆம் ஆண்டே பிறந்தேன். அத்துடன் ராஜபக்ஷர்களுக்கு ஒருபோதும் சரணம் கச்சாமி குறிப்பிடவில்லை. இந்நிலையில் 2015 ஆம்ஆண்டு அர்ஜூன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக்கி அதன் மூலம் பாரிய மோசடிக்கு ரணில் விக்கிரமசிங்க வழிவகுத்தார்.

அத்துடன் அவரின் உறவினரான அலோசியஸின் மெண்டிஸ் நிறுவனத்துக்கு 3.5 பில்லியன் ரூபா வங்கி ஒன்றிடம் கடன் உள்ளது. எனவே அதனை மீண்டும் கொண்டு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்க உதவவேண்டும்.