IPL Match53 - 75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

#IPL #T20
Prasu
4 years ago
IPL Match53 - 75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடரில் இன்று இரண்டாவதாக நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  அதன்படி லக்னோ அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான கே.எல் ராகுல் ஒரு ரன் கூட எடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 

மற்றொரு வீரர்  டி காக் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அவுட்டானார். 

தீபக் ஹூடா 41 ரன்னும், க்ருனால் பாண்ட்யா 25 ரன்னும் அடித்தனர்.  பதோனி 15 ரன்னும், ஸ்டோய்னிஸ் 28 ரன்னும், ஹோல்டர் 13 ரன்களும் எடுத்தனர்.  

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி கொல்கத்தா அணி லக்னோ அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து. 

அதிகபட்சமாக ஆன்ட்ரு ரஸ்ஸல் 45 ரன்கள் அடித்தார். ஆரன் பிஞ்ச் 14 ரன்னும், சுனில் நரேன் 22 ரன்னும் அடித்தனர். அந்த அணியின் மூன்று வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமலும்,  பிற வீரர்கள் ஒற்றை இலக்குடன் விக்கெட்டை பறிகொடுத்தனர். 

கொல்கத்தா அணி 14.3 ஓவர் முடிவில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

லக்னோ அணி தரப்பில் அதிபட்சமாக அவிஷ்கான் 3 விக்கெட்களும், ஹோல்டர் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4