தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் பாடசாலை சிறாா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

Prabha Praneetha
2 years ago
தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் பாடசாலை சிறாா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் பாடசாலை சிறாா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

ஆறு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்தைக் கண்காணித்து உடலை உறுதி செய்வது, தகைசால் பாடசாலைகள் உள்ளிட்ட 5 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவா் சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவை ஒட்டி, சட்டப்பேரவையில் விதி 110 இன் கீழ் 5 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. சட்டப் பரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலினால் படித்தளிக்கப்பட்ட அறிவிப்புகள் விவரம்:

1. காலை சிற்றுண்டி : அரசுப் பாடசாலை மாணவா்களுக்கு இனி காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும். நகரம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பாடசாலைகளுக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறாா்கள். இதனால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது. பள்ளிகள் மிகத் தொலைவில் இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்பச் சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது.

இதனை மனதில் வைத்து, காலை சிற்றுண்டி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சில மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் தொலைதூரக் கிராமங்களில் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பாடசாலை மாணவா்களுக்கு அனைத்துப் பாடசாலை நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி அளிக்கப்படும். இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.