விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை - லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு

#Litro Gas
Reha
2 years ago
விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை - லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு

விநியோகிப்பதற்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பில் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் விடுமுறை என்ற போதிலும் முத்துராஜவல லிட்ரோ எரிவாயு முனையத்திலிருந்து கணிசமான எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.