தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை - IBPS அறிவிப்பால் சர்ச்சை

#India #Tamil Nadu #Bank
தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை - IBPS அறிவிப்பால் சர்ச்சை

தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளுக்கு தமிழ் கட்டாயமில்லை என்ற வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனமான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது

வங்கிகளில் கிளர்க் பணிகளுக்கு மாநில அலுவல் மொழி கட்டாயமில்லை என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமான IBPS அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால், தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் பணியாற்ற 843 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில், சுமார் 400 பேர் வெளிமாநிலத்தவர் என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஆங்கில நாளேடுக்கு பேட்டி அளித்துள்ள அகில இந்திய ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலசங்க பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி, ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் 20 முதல் 30 விழுக்காடு வெளிமாநிலத்தவர்களே பணியமர்த்தப்பட்டு வந்ததாகவும், தற்போது, இந்த எண்ணிக்கை 50 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2022-23ஆம் ஆண்டுக்கான பணியாளர் தேர்வு பட்டியலில் 50 விழுக்காடுக்கு மேல், தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்களே இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக இந்திய வங்கிகளின் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் பணியாற்றுவதால், வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவை பெறுவதில் பாதிப்பு ஏற்படுவதும், தமிழ் பணியாளர்களிடம் செல்லுமாறு அவர்கள் கைகாட்டி விடுவதும் வாடிக்கையாகியுள்ளது.

தமிழ் தெரியாமல் பணியில் சேரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில மொழியை கற்றுக்கொள்ள 3 மாத அவகாசம் அளிக்கப்படுவதாகவும், அதற்குள் தமிழ் கற்றுக்கொள்ளாதவர்களை தகுதிநீக்கம் செய்யாமல், கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!