பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசிய அரசு தடை

#Indonesia
Prasu
4 years ago
பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசிய அரசு தடை

இந்தோனேசியாவில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யக்கூடிய 5.5 கோடி டன் எண்ணெயில் 3.4 கோடி டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதம் உள்ள அளவே உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. 

இந்நிலையில் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசிய தடை விதித்துள்ளது.  உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க கூடாது என்று உலக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், 

இந்நோனேசிய அரசு பாமாயில் ஏற்றுமதியை தடை செய்துள்ளது. அந்நாட்டில் பாமாயில் விலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதையடுத்து, இந்தோனேசிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இருப்பினும் குறுகிய கால நடவடிக்கையாக தான் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சுத்திகரிக்கப்படாத பாமாயில், சமையலுக்கான பாமாயில் என அனைத்து வகைகளின் ஏற்றுமதிக்கும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.  உள்நாட்டில் சமையல் எண்ணெயின் விலை குறையும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பாமாயில் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் இந்தோனேசியாவின் இந்த தடை நடவடிக்கையால், சர்வதேச வர்த்தக சந்தையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.  அதே சமயம் இந்த தடை உற்பத்தியால் உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4