கொலை சம்பவத்தில் பிரபல கிரிக்கெட் வீரருக்கு சிறைத்தண்டணை
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து.
பாட்டியாலாவில் வசிக்கும் குர்னாம் சிங்குடன் டிசம்பர் 27, 1988 அன்று, வாகனம் நிறுத்தும் இடம் தொடர்பாக சித்துவும், அவர் நண்பர் ரூபிந்தர் சிங் சந்துவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு குர்னாம் சிங்கை அவரது காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியதாகவும், இதில் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹரியானா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணையில் சித்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
நவ்ஜோத் சிங் மீதான குற்றம் விசாரணையில் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், நவ்ஜோத் சிங் சித்து நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.