பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு இந்தியா - ஐ.நா.

#India
Prasu
4 years ago
பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு இந்தியா - ஐ.நா.

ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

உக்ரைன் போரால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சி, மறுமதிப்பீடு செய்யப்பட்டு 4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

போர் காரணமாக உலகளவில் பணவீக்கம், கடந்த 10 ஆண்டு சராசரியை விட, இரு மடங்கு உயர்ந்து, 6.7 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தாண்டு தெற்காசிய பொருளாதார மதிப்பீடு 0.4 சதவீதம் குறைக்கப்பட்டு, 5.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

இந்திய பொருளாதாரம் 2021-ம் ஆண்டில் 8.8 சதவீதம் வளர்ச்சி கண்டது. இந்தாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 0.3 சதவீதம் குறைந்து 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரித்தபோதிலும், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது என தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4