பிரித்தானியாவில் தீவிரமடையும் குரங்கு அம்மை மேலும் பலருக்கு தொற்று!

Nila
4 years ago
பிரித்தானியாவில் தீவிரமடையும் குரங்கு அம்மை மேலும் பலருக்கு தொற்று!

உலகலாவிய ரீதியில் பல லட்சம் மக்களை கொன்று குவித்த பொரோனா தொற்று சற்று குறைவடைந்துள்ள நிலையில் தற்போது குரங்கு அம்மை தொற்று பல உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் பிரித்தானியாவில் கடந்த மே7 அன்று குரங்கு அம்மை தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அந்த நபர் சமீபத்தில் நைஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டவர் எனவும் இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்பாக நைஜீரியாவிலிருந்து அவருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனஇ பிரிட்டன் சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் மேலும் 11 பேர் குரங்கு அம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள பெரும்பாலான நோயார்களுக்கு நோய் தொற்று தீவிரம் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4