விஷாலுடன் கைக்கோர்த்த ரித்து வர்மா

Prabha Praneetha
4 years ago
விஷாலுடன் கைக்கோர்த்த ரித்து வர்மா

மார்க் ஆண்டனியாக களமிறங்கி இருக்கும் விஷாலுடன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கதாநாயகி ரித்து வர்மா இணைந்துள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.

இதனை தொடர்ந்து விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி என்ற பெயர் 1995-ல் ரஜினி நடிப்பில் வெளியான பாட்சா திரைப்படத்தின் வில்லன் ரகுவரனின் கதாப்பாத்திர பெயராகும்.

எனவே இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஷாலுடன் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4