ரஷ்யாவிற்குள் நுழைய ஜோ பைடனுக்கு நிரந்தர தடை விதித்த ரஷ்யா

#Russia #United_States #President
Prasu
4 years ago
ரஷ்யாவிற்குள் நுழைய ஜோ பைடனுக்கு நிரந்தர தடை விதித்த ரஷ்யா

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்க அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எடுத்த நடவடிக்கை சர்வதேச கவனங்களை ஈர்த்துள்ளது.

ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு, அமெரிக்க அதிபருக்கு நிரந்தர தடை விதித்துள்ளார் புடின். இது மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைக்கு எதிரான ஒரு அடையாள நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது

நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அமெரிக்கர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது என்று சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த புதிய பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பிடென் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உட்பட பல அமெரிக்க முக்கியஸ்தர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

இதில் வியப்பளிக்கும் விஷயமும் ஒன்று உள்ளது. அமெரிக்காவின் (America) முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது பல கேள்விகளையும் எழுப்புகிறது.

அமெரிக்க அதிபராக பதவியில் இருந்தபோது, ​​​​டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் கடுமையாக இருந்ததில்லை என்பது காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் புடினைப் பகிரங்கமாகப் புகழ்ந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க உளவுத்துறையின் கருத்துக்கு எதிராகவும் பேசினார் என்பது உலக வரலாறு.

தற்போதைய தடை பட்டியல் புதுப்பிக்கப்பட்ட பிறகுக், மொத்தம் 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முனைப்புடன் செயல்பட்டது.  ரஷ்ய பொருளாதாரத்தை முடக்கச் செய்யும் பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் பொருளாதார நிலைமையை கடினமாக்கியுள்ளன, 

புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் பெரும்பான்மையான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில், அமெரிககவின் தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இடம் பெற்றுள்ளனர்.

2018 இல் இறந்த செனட்டர் ஜான் மெக்கெய்ன் கூட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதும் இந்த பட்டியலின் விசித்திரமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4