வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றார் பந்துல

Prathees
2 years ago
வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சராக  கடமைகளைப் பொறுப்பேற்றார் பந்துல

வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கலாநிதி பந்துல குணவர்தன இன்று பொல்ஹெங்கொடவில் அமைந்துள்ள வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சராக இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கலாநிதி பந்துல குணவர்தன, சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சுக்கு திரும்பினார்.

கலாநிதி பந்துல குணவர்தன இதற்கு முன்னர் வெகுஜன ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். அதற்கு மேலதிகமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக கலாநிதி குணவர்தன இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.