நயன்தாரா -விக்னேஷ் திருமணம் -reception எங்க எத்தனை மணிக்கு..?

Prabha Praneetha
4 years ago
நயன்தாரா -விக்னேஷ் திருமணம் -reception எங்க எத்தனை மணிக்கு..?

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வருகிற ஜூன் 9 ஆம் திகதி திருமணம் செய்ய உள்ளனர். இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெறும் என முன்னதாக தகவல் வெளியானது.

சமீபத்திய தகவல்களின்படி, இருவரும் ஜூன் 9 ஆம் திகதி தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

டிஜிட்டல் அழைப்பிதழ் ஒன்று சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராக உள்ளனர். ஏழு வருட டேட்டிங்கிற்குப் பிறகு, இருவரும் ஜூன் 9-ம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

தற்போது, ​​இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெறாமல், மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது என்பது லேட்டஸ்ட்டாக தெரியவந்துள்ளது.

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் விவிஐபிக்கள் 30 பேர் மட்டும் தான். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட சிலரும் விவிஐபி.,க்கள் லிஸ்டில் உள்ளார்களாம்.

மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளது.ஜுன் 9 ம் திகதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்ட போகிறார்.

முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மிக பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.ஜுன் 8 ம் திகதி சென்னையில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண வரவேற்பை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4