திரு. சதீஸ் அவர்களது «வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்» நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

Reha
1 year ago
 திரு. சதீஸ் அவர்களது «வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்» நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்   

அன்புடையீர், வணக்கம்!   

தமிழர் களறி மண்டபத்தில் விவேகானந்தனூர் திரு. சதீஸ் அவர்களது «வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்» நூல் வெளியீட்டு விழா.  

திருவள்ளுவர் ஆண்டு 2053 விடைத்திங்கள் 22ம் நாள் ஞாயிற்றுக்கிழமை  05. 06. 2022 ஞாயிறு மாலை 17.30 மணிமுதல் Europaplatz 1B, 3008 Bern

ஈழத்தில் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு. செல்லையா சதீஸ்குமார் என்னும் இயற்பெருடை சதீஸ், இலங்கை சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளார். 

இவர் கவிதைகள், சிறுகதைகள் வாயிலாக தமிழர்களது இன்னலை தனது படைப்பில் வெளிப்படுத்திவரும் படைப்பாளி ஆவார்.  

சிறைபட்டிருக்கும் விடுதலை விரும்பியின் உள்ளக்கிடங்கின் எண்ணப் படைப்பின் வலியை உணர்ந்து படைப்பினை நுகர வாருங்கள்.    

அன்புடன்  தமிழர் களறி