உங்கள் மன அழுத்தம் குறைக்கும் பிரியாணி இலை

#Health #Biryani #herbs
உங்கள் மன அழுத்தம் குறைக்கும் பிரியாணி இலை

பிரியாணி இலையை நறுமணத்திற்காக உணவில் சேர்க்கிறோம். இந்த இலைகளில் எண்ணற்ற குணங்களும் இருக்கின்றன.

  • பிரியாணி இலைகளில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் கனிம சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், செலினியம், மாங்கனீசு, இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.
  • இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பல பிரச்னைகளுக்கு மருந்தாகிறது.
  • பிரியாணி இலைகளில் உள்ள இன்டர்லியூகின் என்ற புரதச்சத்து அழற்சி மற்றும் சுவாசப் பிரச்னைகளைத் தீர்க்கும்.
  • பிரியாணி இலையை வீட்டினுள் எரித்து அதன் நறுமணத்தை சுவாசிக்க மனஅழுத்தம் குறைவதுடன் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உண்டாக்கும்.
  • இதன் நறுமணம் அரோமா தெரபிகளில் சருமம், சுவாசப் பிரச்னை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.
  • பிரியாணி இலையில் உள்ள காஃபிக் அமிலமும் ரூடின் என்ற பொருளும் இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களை வலுப்பெறச் செய்கின்றன. மேலும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
  • இதன் இலையிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் மூட்டுவலி, தலைவலி நீங்கும்.
  • புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களான காஃபிக் அமிலம், யூஜினால் மற்றும் க்யூயர்சிடின் உள்ளதால் புற்றுநோய் வராமல் தடுக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4