அனிருத்தை திருமணம் செய்ய விரும்பும் பிரபல பாடகி

Prabha Praneetha
4 years ago
அனிருத்தை திருமணம் செய்ய விரும்பும் பிரபல பாடகி

சமீப நாட்களாக இசையமைப்பாளர் அனிருத் திருமணம் குறித்து பலவேறு வதந்திகள் பரவி வருகின்றன. 

அவர் பிரபல நடிகையை காதலிக்கிறார் என்றும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்றும் இணையத்தில் தகவல்கள் பரவி வந்தன. 

ஆனால் இரு தரப்பிலும் அதை மறுத்து விட்டனர். இப்போது பிரபல பாடகி ஜோனிடா காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அனிருத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பதிலளித்திருக்கிறார்.

அவரிடம் சூர்யா, ரண்பீர் சிங், அனிருத் இந்த மூவரில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது. 

இதற்கு பதிலளித்த ஜோனிடா சூர்யா, ரண்பீர் சிங் இருவரும் திருமணம் ஆனவர்கள். அதனால் நான் அனிருத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று ஜாலியாக பதிலளித்திருக்கிறார்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4