இலங்கை கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள சக்திஇல்லம் சகோதரி ஒருவருக்கு கையளிப்பு!
இலங்கை மட்டக்களப்புமாவட்டம் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா பிரதேசத்தில் விசேடதேவையுடையதும் வலுவிழந்தும் வறுமைக்கோட்டுன்கீழ் வாழ்ந்துவந்ததோடு, பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்த ஒரு சகோதரி வீடமைத்துத்தரும்படி எம்மிடம் வேண்டுகோள்வைத்த நிலையில் ..
எமது ஆதிபராசக்தி அறப்பணிமையத்தால் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சக்தி திரு. மாசிலாமணி ரவி குடும்பத்தின் நிதியனுசரணையோடு இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது மழைக்காலத்தில் சாதாரணமக்களே மழைவெள்ளம் நிரம்பிநிற்க உடல்உபாதைகளை கழிக்க மலசலகூடத்திற்கு தவிக்கும் நிலையில் ..குடியிருக்க நல்ல வீடின்றிக் கொட்டிலில் வசிக்கும் இந்தப் பெண் சகோதரி மாதவிலக்கு காலத்திலும் மற்றும் இதர தேவைகளுக்கும் எவ்வளவு கஸ்ரப்படுவார் என எண்ணி வீட்டிற்குள்ளேயே தவழ்ந்து போயாவது தனது தேவைகளை நிறைவேற்றக்கூடியவாறு ஆதிபராசக்தி அறப்பணிமையத்தினராகிய நாம்சிந்தித்து குளிப்பதற்கும் மலசலம் கழிப்பதற்கும் ஏற்றவாறு வீட்டோடு சேர்த்தே (பாத்றூம் டாய்லற் ) வசதியோடும் குளாய்மூலம் தண்ணீர் வசதியும் ஏற்பாடு செய்து கட்டிக்கொடுத்துள்ளோம் . தற்போதைய சூழலில் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல கட்டிடப்பொருட்களும் உலங்கையில் 4 மடங்கு விலை அதிகரித்துள்ள நிலையிலும் சக்தி ரவி அவர்கள் இந்த வீட்டிற்கான நிதியினைவழங்கி கட்டிக்கொடுத்துள்ளார் .
இந்த வீட்டின் செலவில் கூலிகளை குறைக்கும் வகையில் எமது ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் சக்தி திரு. வினோராஜ் உடனான அறப்பணியாளர்கள் தமது வாழ்வாதார வேலைப்பளுக்களுக்கிடையில் வீட்டிற்காக சிரமதான அடிப்படையில் பணியாற்றி செலவுச் சுமையைக் குறைத்து உரிய நேரத்தில் வீட்டினைக் கையளித்துள்ளனர் .அவருக்கும் அவருடனான அறப்பணியாளர்களுக்கும் எமது மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் .
நிதிப்பங்களித்த சக்தி திரு .மா.ரவி அவர்களுக்கும் பெருநன்றியோடு அம்மாவின் பேரருள் கிடைக்கவும் வேண்டிக்கொள்கிறோம்.
“அறம்வழி நிற்பதே மறம் “
அன்புடன் :
சக்தி சுவிஸ் சுரேஷ்
ஆதிபராசக்தி அறப்பணிமையம்
(நிறுவனர்)