பிரிந்த குடும்பம் ஒன்று சேர இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கவும்
வைகாசி மாத வளர்பிறை பிரதோஷம் 2022.06.12
சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த நாளாக கருதப்படும் நாள் பிரதோஷம். மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
இது சூரியன், சந்திரன் ஆகியவற்றின் சுழற்சி முறையை வைத்து கணக்கிடப்படுள்ளது. அமாவாசை அடுத்து வரும் பதின்முன்றாவது நாள் பிரதோஷம் எனப்படும்.
வளர்பிறையில் வரும் பிரதோஷம் சுக்ல பட்ச பிரதோஷம் ஆகும். பௌர்ணமி அடுத்து வரும் பதின்முன்றாவது நாள் பிரதோஷம் எனப்படும். தேய்பிறையில் வரும் பிரதோஷம் கிருஷ்ண பட்ச பிரதோஷம் எனப்படும்.
வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவபவர்களுக்கு பிறருடன் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் நீங்கும்.
உடல்நல குறைபாடுகள் அறவே நீங்கும். வாழ்வில் உணவிற்கு கஷ்டப்படுகின்ற நிலை உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ ஏற்படாது.
குடும்பத்தில் நீண்ட காலமாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கும்.
சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும்.
இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.