“33 வது சக்தி இல்லம் கையளிப்பு”

Prabha Praneetha
1 year ago
“33 வது சக்தி இல்லம் கையளிப்பு”

கடந்த 24.05.2022 அன்று இலங்கை அம்பாறை மாவட்டத்தில் கல்முனை 7ம் கிராமத்தில்  மிகவும் வறுமைக்கோட்டுன்கீழ் பாதிக்கப்பட்டு வீடற்று பெண்
பிள்ளைகளோடு  மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்துவந்த ஒரு குடும்பத்திற்கு  மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையத்தால்  இந்தவீடு நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. 

இதற்கான நிதியனுசரணையினை  சுவிஸ் பாசல்மாநிலத்தில் வசிக்கும் சக்திகள் திரு. திருமதி .சிவநாதன் சர்வேஸ்வரி  மற்றும் அவர்களது பிள்ளைகளான சக்தி செல்வி.

காயத்திரி& சக்தி செல்வி . அக்‌ஷயா ஆகியோரது நிதிப்பங்களிப்பில்  இது கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணியினை செவ்வனவே செய்துமுடித்த எமது ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் கல்முனை பொறுப்பாளர் சக்தி .திரு.ரூபன் உடனான அறப்பணியாளர்களுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக..!

swiss
jhn

நிதிப்பங்களித்த அம்மா பக்தர்களான சக்தி சிவநாதன் குடும்பத்தினர் ஆதிபராசக்தி அம்மனின் அருளோடு சிறப்புற வாழ்ந்திட அம்மா அருளை வேண்டுகிறோம் . 
ஓம்சக்தி ..! ஆதிபராசக்தி..!!

அன்புடன் :
சக்தி சுவிஸ் சுரேஷ் 
நிறுவனர் :ஆதிபராசக்தி அறப்பணிமையம் - சுவிஸ்