சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் - அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது!

Nila
4 years ago
சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் - அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’சந்திரமுகி’. இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பி வாசு இயக்க இருப்பதாகவும் இந்த படம் ’சந்திரமுகி 2’ என்ற டைட்டிலை கொண்டிருந்தாலும் முதல் பாகத்தின் கதையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சுபாஸ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் ’சந்திரமுகி 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முதல் பாகத்தில் நடித்த வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஒரு ஆச்சரியமாக கருதப்படுகிறது.

பி வாசு இயக்கத்தில், ஆர்கே ராஜசேகரின் ஒளிப்பதிவில் எம்எம் கீரவாணியின் இசையில் தோட்டாதரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4